முல்லைத்தீவு வனப்பகுதியில் இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வனப்பகுதி ஒன்றில் இருந்து குறித்த C 4 வெடிமருத்துகளை மீட்டதாகவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் இரு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் உடையார்கட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir