யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதிகளில் 5 குடும்பங்கள் தனிமை

காரைநகர் கொரோனா தொற்றாளியுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் உள்ள ஒழுங்கையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் யாழ். கஸ்தூரியார் வீதி யாழ் இந்துமகளிர் வீதி சந்தியில் ஒரு குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காரைநகர் கொரோனா தொற்றாளி கலந்துகொண்ட திவசத்தில் கலந்து கொண்ட ஒருவர் சாவகச்சேரி திருமண நிகழ்விற்கு சென்றுள்ளார்.

அதனையடுத்து திருமண வீட்டுடன் தொடர்புடைய இரு குடும்பங்கள் என யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir