புலிகளை நினைவேந்திய சுமந்திரன் எப்படி எம்.பியாக இருக்க முடியும் – சரத்

இலங்கை அரசியலமைப்பிற்கு விசுவாசமாக செயற்படுவேன் என்று சத்தியபிரமாணம் செய்த சுமந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்தில் புலி ஒருவரின் நினைவேந்தலில் பங்குபற்றியுள்ளார். அத்தகையவர் எப்படி நாடாளுமன்றத்திற்குள் வரமுடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வியெழுப்பினார்.

நாடாளுமன்றில் சுமந்திரன் உரையாற்றிவிட்டு அமர்ந்த போது, எழுந்த சரத் விரசேகர கேள்விக் கணைகளை தொடுத்தார்.

சில தினங்களுக்கு முன் பண்டிதர் எனும் புலிக்கு நினைவேந்தல் செய்துள்ளார். பண்டிதர் பிரபாகரனின் சிறுவயது நண்பர். அவரும் கிட்டுவும் மிக மோசமான கொலை காரர்கள்.

புலிகளின் யாழ்பாணத் தளபதியை நினைவேந்தல் செய்த ஒருவர் எவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் நுழையமுடியும்? அதற்கான காரணங்களை சபாநாயகர் அவரிடம் கேட்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை கௌரவப் படுத்துவது என்பது நாட்டின் இறையான்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல். அத்தகைய செயலைச் செய்து அவர் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்தை மீறியுள்ளார். அவர் எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும்? என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir