கண்டியில் மருத்துவருக்கும் 7 தாதியருக்கும் கொரோனா!

கண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவரும், ஏழு தாதியர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டி மருத்துவமனை பதில் பணிப்பாளர் மருத்துவர் ஈரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி மொத்தமாக கண்டி தேசிய மருத்துவமனையில் 18 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir