பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்க அரசாங்கம் தீர்மானம்

பேலியகொடை மீன் சந்தையை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது. மீன் சந்தையை விரைவாக மீளத் திறப்பதற்கான சாத்தியப்பாடுகளை அறியும் முகமாக, சுகாதார துறையினரால் அங்கு நேற்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

இதன் போது மீன் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிய தகவலும் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே பேலியகொடை மீன் சந்தை மீள திறக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். எனினும், மொத்த விற்பனையாளர்கள் மாத்திரம் செல்வதற்கே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir