சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி ; மரணத்தில் சந்தேகம்!

யாப்பாணம் பருத்துறை- சாரையடி பகுதியில் 07 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் மந்திகை சாரையடி(மதுவரி திணைக்களத்திற்கு பக்கத்து ஒழுங்கை) ஸ்ரீதரன் கம்சி (வயது 9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அதன்பின்னர் மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது சிறுமி துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாக பருத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட முறையில் கடுமையான சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் பிரேத பரிசோதனை அறிக்கையினை எதிர்பார்த்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த சிறுமியின் அருகில் யூஸ் பை ஒரு பகுதி இருந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir