சிறை வன்முறை; பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காயமடைந்த 107 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir