மஹர சிறை மோதல்; உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் உயிரிழந்தனர்.

இதன்போது, மேலும் 106 கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்த நிலையில் அவர்களில் 29 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறு காயமடைந்த கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir