மஹர சிறை மோதல் விசாரணைக்குழுவில் லலிந்த ரணவீர

மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து காவல்துறை பேச்சாளரான பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண விலகிய நிலையில், அவரது இடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் லலிந்த ரணவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த அமைதியின்மை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை அத்தியட்சகர் ஆர்.ஏ.டி.ஈ.எல்.ரந்தெனிய தலைமையிலான 12 பேரைக் கொண்ட குழுவொன்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனப் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir