கிழக்கில் இருந்து முல்லைத்தீவிற்கு அண்மையாக புரேவி

வங்கக்கடலில் உருவாகியுன்ன புரேவி புயல் முல்லைத்தீவுக்கு அண்மையாக கரையை கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றிரவு 7 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் புயல் கரையை கடக்கும். திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடையில், முல்லைத்தீவிற்கு நெருக்கமாக புயல் கரையை கடக்கவுள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, திருகோணமலைக்கு கிழக்கு, தென்கிழக்கு திசையில் 200 கிலோமீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir