வீடுகளில் இருந்து வெளியேறவேண்டாம்; வடக்கு- கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இன்று இரவு புரெவி புயல் இலங்கையை கடந்துசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது பொதுஇடங்களில் வெளியிடங்களில் ஒன்றுகூடவோ வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir