கொலையில் முடிந்த மோதல்!

பொரளை – ஹல்கஹவத்த பகுதியில் இளைஞர் ஒருவரினால் கூரிய ஆயுதத்திலான தாக்குதலுக்கு இலக்காகி இன்னோர் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் வீடொன்றின் முன்னால் ,நேற்று திங்கட்கிழமை இரவு 11.20 மணியளவில் வெட்டுக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில், இளைஞர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது, ஹல்கஹவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தனிப்பட்ட முரண்பாடொன்றின் காரணமாக ஏற்பட்ட மோதலின் போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தினால் குத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் குறித்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir