தேசிய வைத்தியசாலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையல் பிரிவில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அச்சூழல் முற்றுமுழுதாக கிருமி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

தொற்றுக்குள்ளான பணியாளர்கள் நேற்றைய தினம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதோடு அவர்களோடு தொடர்புடையோர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சமையல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இன்று முதல் வேறு சிலரை உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தொிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir