நுணாவில் விபத்தில் சிறுவன் உட்பட இருவர் பரிதாப பலி

இன்று முற்பகல் 11.50 மணியளவில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் A9 வீதிபகுதியில் கார் ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் பயணித்துள்ளனர்.

அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன் ஒருவன் , 35 வயதுடைய பெண் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir