வவுனியா நகரசபை ஊழியர் விபத்தில் மரணம்

வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் விபத்திற்குள்ளாகியிருந்தார்.

இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றையதினம் காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

விபத்தில் வவுனியா நகரசபையில் சாரதியாக பணிபுரியும் இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக இறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir