புதுக்குடியிருப்பு மூங்கிலாற்றில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் கஞ்சா வியாபாரம் இடம்பெற்று வருவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்துஇன்று (10)காலை கஞ்சா வியாபரத்தில் ஈடுபடும் இருவரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்த பொதிசெய்யப்பட்ட 1.5 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சுதந்திரபுரம் கொலனியை சேர்ந்த 24 அகவையுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உந்துருளிகளும் முல்லைத்தீவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்றுப்பொருட்களையும் 11.12.2020 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

You May Also Like

About the Author: kalaikkathir