இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும்

மட்டகளப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் காலை வேளைகளில் மழை வீழ்ச்சி பதிவாகும்

இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir