மேலும் 197 பேர் நாடு திரும்பினர்

தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகள் சென்று கொரோனா பரவலால் நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த 197 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து 78 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 12 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir