504 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக குறித்த நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த 504 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில், டுபாயில் இருந்து 144 பேரும், மாலைத்தீவில் இருந்து 31 பேரும், கட்டாரில் இருந்து 51 பேரும், அவுஸ்த்திரேலியாவில் இருந்து 75 இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், ஜபானின் நரீட்டாவில் இருந்து 203 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த அனைவருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir