லொக்காவுக்கும் சொல்டாவுக்கும் ஆயுதங்களை வழங்கிய நபர் கைது!

பாதாள உலக குழு உறுப்பினர்களான அங்கொட லொக்கா மற்றும் சொல்டாவுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து இரண்டு ஆயுதங்களும் மற்றும் டி-56 வெடி மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir