கொரோனா மரணம் 150ஐக் கடந்தது

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் வத்தள பகுதியை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மாத்தளை பகுதியை சேர்ந்த 76 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir