இலங்கை தமிழ் மீனவர்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது – மாவை

இலங்கைத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புகின்ற பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளதென, இந்தியாவின் பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் மாவை சோனாதிராசா அவர்களைச் சந்தித்து நேற்று கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வரலாறு முழுவதும் இயற்கை அனர்த்தத்திலும், குறிப்பாக சுனாமி அனர்த்தக் காலத்திலும் கரையோர பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்துப் பாதிப்புக்களுக்கும் மீனவர் சமூகமே முகங்கொடுத்துவருகின்றது.

எனவே அவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்புகின்ற பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது என்பதை இந்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்யவேண்டும். என குறித்த பொறுப்பு வாய்ந்த இந்திய அதிகாரியிடம் மாவை சேனாதிராசா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir