இலங்கையில் சமூக தொற்றை அரசு ஒப்புக்கொள்ளவேண்டும் – திஸ்ஸ விதாரண

இலங்கையில் கொரோனா வைரஸ் தற்போது கொத்தணிகளுக்குள் மாத்திரமின்றி சமூகம் முழுவதும் பரவி வருகின்றது. இனியாவது இந்த உண்மையை அரச தரப்பினர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொரோனா வைரஸ் உலகத்தில் பரவி வரும் புதிய வைரஸ் என்பதால், அதனை எதிர்கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களிடம் இல்லை.

இந்த வைரஸ் இலங்கையில் சமூகம் முழுவதும் பரவி உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள சிலர் விரும்பவில்லை. எனினும், உண்மையை எதிர்கொண்டு, அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 80 வீதமானவர்களுக்கு எந்த நோய் அறிகுறிகளும் தென்படுவதில்லை என்பது உறுதியாகி இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir