பொது போக்குவரத்து பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கான விசேட அறிவிப்பு

பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் விபரங்களை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பயணிகளின் விலாசம் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களை நடத்துநர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பஸ்களில் பயணிக்கும் பயணியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் ஏனையோரை அடையாளப்படுத்த இந்த செயற்பாடு உதவியாக அமையும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

ஆகவே பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தமது விபரங்களை பதிவு செய்து அவற்றை தம் வசம் எடுத்துச் செல்வது ஒத்துழைப்பாக அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்,

You May Also Like

About the Author: kalaikkathir