வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு

வவுனியா சைவப்பி்ரகாசா மகளீர் வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(18) அவர் மரணமடைந்தார்.

குறித்த பாடசாலையில் கல்விகற்கும் தனது மகளை ஏற்றி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரை பட்டா வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். சம்பவத்தில் வவுனியா ஒயார் சின்னக்குளத்தை சேர்ந்த க.சிறிஸ்கந்தராயா வயது 56 என்ற நபரே மரணமடைந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir