சுகாதார விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கமைய 1562 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir