பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 2021 ஜனவரி 03 ஆம் திகதிவரை பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir