பஸில் ராஜபக்ச அருகே இருந்தவருக்கு கொரோனா

கண்டி – பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் பேசுவோம் என்கிற கிராம அபிவிருத்தி சார்ந்த கலந்துரையாலுக்கு வந்திருந்த அக்கரப்பத்தனை தலைவர் கதிர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நுவரெலியா மாவட்ட பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் காணமாக அக்கரப்பத்தனை பிரதேச சபையில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் நிகழ்வில் கலந்துகொண்ட பஸில் ராஜபக்ச உட்பட உயர்மட்டப் பிரதிநிதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களா என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை

You May Also Like

About the Author: kalaikkathir