இறுதி கிரியைகளை செய்ய உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை

கொரோனா வைரஸ் நோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் இறுதி கிரியைகளை செய்ய அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறும், இந்த விடயத்தில் இனவாத அடிப்படையில் வேறுபாடு காட்ட வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எவரும் கொரோனா வைரஸை விரும்பி தம்மீது தொற்ற வைத்துக்கொள்வதில்லை. அறியாமலேயே அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் துரதிஷ்டவசமாக இறக்கின்றனர்.

இதனால், உயிரிழப்பவர்களின் இறுதி கிரியையை மேற்கொள்ள அவர்களின் உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவது அத்தியவசியமான விடயம்.

இதனால் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உறவினர்களுக்கு இறுதி கிரியைகளை செய்ய சந்தர்ப்பத்தை வழங்கி மனிதாபிமானமாக நடந்துக்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

கொரோனா வைரஸ் காரணமாக 9 வதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு அந்த பெண்ணை இறுதியாக பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரு பிள்ளைக்கு மாத்திரமே வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் என நான் கருதுகிறேன்.

மக்களுக்கு கௌரவமான பிரஜைகளாக வாழ இடமளிக்காவிட்டால் பரவாயில்லை. எனினும் கௌரவமான மரணம் மற்றும் இறுதியை கிரியையை செய்யும் உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இதற்கு எதிராக அரசாங்கம் செயற்படும் விதத்தை நாங்கள் கண்டிக்கின்றோம் எனவும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir