கொரோனாவை கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றின் மையமாக கொழும்பு மாறிவிட்டது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க குறைந்தபட்சம் ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தை முடக்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை நாள்களில் மேல் மாகாணத்திலிருந்து பயணங்களை மேற்கொள்கின்றமையால் கொரோனா தொற்று ஏனைய மாகாணங்களுக்கும் பரவக்கூடும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் நாள்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தல் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி நேற்று செய்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir