மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கொரோனா பரவவும் அபாயம்

எதிர்வரும் விடுமுறை நாள்களில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு கட்டுப்பாடு இன்றி தொற்று மேலும் பரவினால், 2021 ஆம் ஆண்டுக்கான திட்டங்களைச் செயற்படுத்த முடியாமல் போகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்தச் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் உறவினர்களைப் பார்க்கச் செலுத்தல் போன்ற மக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காணப்பட்டபோதும் இந்த நிலைமை எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாள்களில் மோசமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த நிலைமையை நிர்வகிக்க அரசாங்கம் சரியான திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றும் நாளாந்தம் நடத்தப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஹரித அளுத்கே கேட்டுக்கொண்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir