இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு கட்டணம் இல்லை

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் ரத்மலானா விமான நிலையங்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையிலேயே திங்கள் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரை இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir