ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க ஒருவாரம் காலக்கெடு

2021 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்கம்பனிகளுக்கு ஒருவார காலம் வழங்குவதற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தீர்மானித்துள்ளார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து, இரண்டு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்தே அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின்போது, தோட்ட கம்பனி சம்மேள பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், தொழிலாளர்கள் நாளாந்தம் மேலதிகமாக 2 கிலோ கொழுந்து பெற்றுத்தரவேண்டும். அத்துடன் தொழிலாளர்கள் தொழிலில் இருந்து விட்டுச்செல்லும்போது வழங்கும் தொழிலாளர் பணிக்கொடையை வழங்குவதற்கு அவர்கள் போதுமானளவு நாளாந்த கடமையை மேற்கொள்வதில்லை. அதனால் தொழிலாளர்கள் அனைவரும் வருடத்துக்கு 180 நாள் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றமை கட்டாயமாக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir