SOLVE நிறுவனம் சார்பாக 20000 மீள்பாவனை செய்யக்கூடிய முகக்கவசங்கள் வழங்கல்

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவிடம் திருமதி பவதாரணி ராஜசிங்கம் SOLVE நிறுவனம் சார்பாக 20000 மீள்பாவனை செய்யக்கூடிய முகக்கவசங்களை வழங்கிவைத்தார்.

சர்வதேச ரீதியில் பரவலாக கொரோனா வைரஸின் தாக்கம் அறியப்பட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தமது இயல்புவாழ்க்கையினை முன்னெடுக்க கட்டாய தேவையொன்றும் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாக நம்பப்படுகின்றது.

இதனடிப்படையல் கல்வி மற்றும் வேலை போன்ற தேவைகளுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சமூகத்தில் ஊடாடவேண்டியதன் தேவையை கருத்தில் கொண்டு SOLVE அதனது பங்களிப்பாக முன்பள்ளி சிறார்கள் மற்றும் ஆசிரியர்களை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக இருபதாயிரம் வரையிலான மீள்பாவணை செய்யக்கூடிய முகக்கவசங்களை வழங்கியுள்ளது.

இன்றைய தினம் கௌரவ அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவை அவரது அமைச்சில் சந்தித்த ளுழுடுஏநு நிறுவனர் பவதாரணி ராஜசிங்கம் அவரிடம் இதனை கையளித்தார்.

இந்த முகக்கவசங்களை பொறுத்தவரையில் அவை பார்ப்பதற்கு சிறுவர்களை கவரும் வகையில் ஓவியங்களை கொண்டிருப்பதனால் அவர்களுக்கு பிடித்ததாக அமையும் என அவர் குறப்பிட்டுள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir