பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை யாப்பில் உள்ளடக்குவதற்கான கலந்துரையாடல்

உணவை முதன்மையாக கொண்ட தகவல் மற்றும் நடவடிக்கைகளுக்கான இலங்கை வலயமைப்பினால் (FIAN SRI LANKA) பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை (ESCR) யாப்பில் உள்ளடக்குவதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்கான தேசிய மட்ட கலந்துரையாடல் இன்று இணையவழியில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதில் உணவு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, கல்விக்கான உரிமை, சுகாதாரத்துக்கான உரிமை, வீட்டுவசதிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்கான உரிமை, நிலம் மற்றும் சொத்துரிமை, வேலை செய்வதற்கான உரிமை மற்றும் தொழிலாளர்களின் உரிமை, நீருக்கான உரிமை, கலாச்சார உரிமைகள் தொடர்பான முன்மொழிவுகள் கலந்துரையாடப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது.

பெற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் உணவை முதன்மையாக கொண்ட தகவல் மற்றும் நடவடிக்கைகளுக்கான இலங்கை வலயமைப்பினால் புதிய யாப்பினை உருவாக்குவதற்கான நிபுணர் குழுவிடம் கையளிக்கப்பட உள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir