139 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 139 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 31 பேர், கட்டாரிலிருந்து 50 பேர், இந்தியாவிலிருந்து 58 பேர் ஆகியோர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தவிர,  சீனா மற்றும் மாலைத்தீவில் இருந்து மூவர் வருகை தரவுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir