நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள வானிலை நிலவர அறிக்கையில் இந்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாக கூடும்.

இந்த நிலையில், காற்று மற்றும் இடிமின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir