தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 460 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 418 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 35 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 343 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 063 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7 ஆயிரத்து 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir