மருதனார்மடம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தைக் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று நடைபெற்ற பி.சி.ஆர். பரிசோதனையின் போது உடுவிலைச் சேர்ந்த ஐவர், கீரிமலையைச் சேர்ந்த ஒருவர், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஒருவர், சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் என 8 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி மருதனார்மடம் பொதுச் சந்தை தொற்று எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir