இன்றைய நாள் தீர்மானம்மிக்கது!

பண்டிகை நிகழ்வுகளை இன்று (வியாழக்கிழமை) குடும்பத்தாருடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று தீர்மானம் மிக்கதாகும் என கூறிய அவர், குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கோரியுள்ளார்.

பொதுப் போக்குவரத்து மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் பஸ்களில் இன்று மீண்டும் அதிகாரிகள் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir