பாக்கிஸ்தானில் கோயில் இடிப்பு : 8 போலீசார் பணிநீக்கம்

பாகிஸ்தான் காரக் மாவட்டம் டெர்ரி கிராமத்தில் பழமையான ஹிந்து கோயிலை ஒரு கும்பல் இடித்தது.இது தொடர்பான வழக்கை நாளை விசாரிக்கும் பாக். உச்ச நீதிமன்றம், சிறுபான்மையினர் நல ஆணையம் விசாரித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே ‘மாகாண அரசு செலவில் கோயில் கட்டித்தரப்படும்’ என முதல்வர் மஹ்மூத் கான் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் கட்சியின் முக்கிய தலைவர்கள் உட்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 போலீஸ் அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

You May Also Like

About the Author: kalaikkathir