சுகாதார விதிமுறைகளை மீறிய 74 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் கொவிட்-19 சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை 2,172 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதிப் காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir