கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைய தொடங்கியுள்ளது- ஹேமந்த ஹேரத்

கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடையத் தொடங்கியுள்ளது ஆனால் உடனடியாக எந்த முடிவிற்கும் வரமுடியாது என சுகாதார அமைச்சின் பொதுசுகாதார சேவையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் அடுத்த சில நாட்களிற்கு நிலைமையை உன்னிப்பாக அவதானித்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றதா? என்பது குறித்த முடிவிற்கு வரவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
.
தற்போது மீண்டும் பி.சி.ஆர் சோதனையின் அளவை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? என்பதை உறுதி செய்யவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir