ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் அரசு – மைத்திரி

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும்.என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உலக சுகாதார நிறுவனம் கூட கூறியிருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் மனங்களையும், உணர்வுகளையும் காயப்படுத்திவிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் மைத்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir