தயாசிறிக்குக் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அரசியல்வாதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் பற்றிக் , கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது ஹிக்கடுவை தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடன் நெருக்கமாகப் பழகியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினர் களமிறங்கியுள்ளனர்

You May Also Like

About the Author: kalaikkathir