சுகாதார விதிமுறைகளை மீறிய 26 பேர் கைது

முகக் கவசம் அணியாத நபர்களை அடையாளம் காண மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 26 பேர் நேற்றைய தினம் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2025 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 1077 பேருக்கு அன்டியன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதுள்ளது இதில் 19பேர் கொரோனோ தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 928 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir