முகக்கவசம் அணியத் தவறிய 20 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறியமைக்காக மேலும் 20 பேர் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதிக்குள் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக 2381 பேர் க‍ைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.

இதேவளை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக மேல் மாகாணத்தில் மாத்திரம் நேற்று 166 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir