சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதிகாவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

இதற்கமைய கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2438 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir