விறகு தேடிச்சென்ற நபர் சடலமாக மீட்பு

சிங்கிமலை பிரதேசத்தில் கிழக்கு எல்லையில் இருந்து ஒரு நபரின் சடலத்தை கண்டு பிடித்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த நபர் விறகுத் தேடிச்சென்றவர் எனவும், அத்துடன் இரு பிள்ளைகளுக்கு தந்தை எனவும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் நேற்று மாலை விறகு கொண்டு வரச் செலவதாக கூறிச் சென்று பின் மீண்டும் வீடு திரும்பாத காரணத்தினால் தோட்ட தொழிலாளர்கள் காவல்துறையினருடன் இணைந்து அவரைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலையில் விறகு மூட்டையொன்றுடன் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir