சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேலும் பத்து சிறை கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஆண் சிறை கைதிகள் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர 129 அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir